சுட்டிக்காட்டி சொன்ன பெண்கள்... அதிகாரிகளை ஒரு பார்வை பார்த்த கலெக்டர்... ஆய்வில் அதிரடி

Update: 2024-08-08 12:47 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில், பேருந்து நிலைய

கட்டுமான பணிகளை, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின், பணிகளை

விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார். அங்கு வந்த பருவதன அள்ளி பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கவில்லை என்றும் சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி இல்லை

எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க, உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்