சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்கள் -ரூ.40,000 இழப்பீடு வழங்கிய NLC நிறுவனம்
கடலூர் மாவட்டம், வளையமாதேவி கிராமத்தில், சேதப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டது. பின்னர் 20 நில உரிமையாளர் விவசாயிகளுக்கு 10 லட்சத்து 53 ஆயிரத்து 702 ரூபாய் மதிப்பிலான இழப்பீடு தொகையை என்எல்சி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து மாவட்ட வருவாய் என்எல்சி நில எடுப்பு அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று 6 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.