குடும்பத்தில் தினமும் பயங்கர சண்டை.. பொறுக்காத மனைவியின் நெருங்கிய... - கணவரை வெட்டிய இருவர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், குடும்பத் தகராறில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர். கடக்கோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கோதண்டத்திற்கும், அவரது மனைவி ராதாவிற்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுமென கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், ராதாவின் உறவினர்களான ஜஸ்வந்த், கோகுல் ஆகியோர் காரில் சென்று கோதண்டம் ஓட்டிவந்த ஆட்டோ மீது மோதியுள்ளனர். இதில் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்த கோதண்டத்தை இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். தகவலின்பேரில் விரைந்த போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைது செய்தனர்.