"தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்கள்" - விவசாயிகள் அரசுக்கு வைத்த கோரிக்கை
நாகையில், போதிய தண்ணீர் இல்லாததால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்...
காவிரி நீரை நம்பி, நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், கீழையூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்ட நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 62 அடியாக சரிந்ததால், கல்லணை வழியாக கடைமடை பகுதியான ஓடம்போக்கி ஆற்றில் வந்த காவிரி நீரின் வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில் போதிய தண்ணீர் வராததால், நெம்மேலி, திருக்கண்ணங்குடி பகுதிகளில் பயிரிடப்பட்ட 200 ஏக்கர் குறுவை நாற்றுகள் காய்ந்து கருகி வருகின்றன.