அநியாயத்தை தனி ஒருவனாக தட்டிக்கேட்ட முதியவர்... பேரன் கண்முன்னே கொடூரமாக கொன்ற அரக்கர்கள்
அநியாயத்தை தனி ஒருவனாக தட்டிக்கேட்ட முதியவர்... பேரன் கண்முன்னே கொடூரமாக கொன்ற அரக்கர்கள்
ஒசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சின்ன பேளகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவர், தனது பேரனுடன் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மத்திகிரி காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர், முனிராஜை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த முனிராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அந்த கிராமத்தில் கர்நாடக மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர்களை முனிராஜ் தட்டிக் கேட்டதால், அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.