சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் - நகராட்சி ஊழியர்கள் எடுத்த அதிரடி Action
திருவாரூர் நகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகளை, நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். இப்பகுதிகளில் இரவு நேரத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். மேலும், மாடு ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.