"ரவுடிகள் பதிவேட்டில் காவலர் பெயர்" - CMக்கு வீடியோ வெளியிட்ட கான்ஸ்டபிள் -SPயின் விளக்கம்
தமிழக காவல்துறைக்கென சங்கம் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து காவலர் வீடியோ வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வரும் செல்லத்துரை என்பவர், தனது பெயர், மானூர் காவல்நிலையத்தில் ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் இருப்பதாகவும், அதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த வித பயனும் இல்லை என வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், காவலர்களின் மன உளைச்சலை போக்க, சங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.