"சிலரது சதியே காரணம்" - ஆளுநரை மறைமுகமாகச் சாடிய முதல்வர்

Update: 2023-11-16 03:07 GMT

மறைந்த கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் போனது குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம் தெரிவித்துள்ளார். சங்கரய்யாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலம் டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. ஆனால், ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காததால், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் சங்கரய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் விடுதலை போராட்ட வரலாறு குறித்து அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் போனதை எண்ணி மனம் வருந்துவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்