"குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு! | Congress

Update: 2024-09-15 14:32 GMT

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டில் நேர்மையற்ற, ஊழல் நிறைந்த கட்சி என்றால் அது, காங்கிரஸ் மட்டும்தான் என்று கூறினார்.

ஊழலின் அனைத்து வகையும் அங்கிருந்துதான் உருவாகின்றன என்றும் அவர் கூறினார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினரும், அதே காங்கிரஸ் ஊழல் பள்ளியில் இருந்து பயிற்சி பெறுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தை கொள்ளை அடிக்கும் ஒரே ஒரு காரியத்தை மட்டும் ஜேஎம்எம் அரசு செய்துள்ளது என்றும், ஜேஎம்எம் அரசு, நீர், காடு மற்றும் நிலத்தில் ஊழல் செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தில் சில மாதங்களுக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்