வீட்டு தரகரை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற இருவர் கைது.. கோவையில் அதிர்ச்சி

Update: 2024-08-23 17:14 GMT

மதுபோதை தகராறில், நபரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற இருவரை கோவை போலீசார் கைது செய்தனர்.

கோவை இருகூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். 59 வயது முதியவரான இவர், வாடகை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளை பெற்றுத்தரும் இடைத் தரகராக பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை.. லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள கருப்பசாமி என்பவரது வீட்டிற்குள் முத்துக்கிருஷ்ணன் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி மற்றும் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ஜோஸ் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் ,ஒப்பந்த முறையில் வீடு பிடித்து கொடுக்குமாறு இருவரும் முத்துக்கிருஷ்ணனிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், பணத்தை பெற்றுக் கொண்டு வீடு பெற்றுத் தராமல் இழுத்தடித்து வந்த முத்துக்கிருஷ்ணனை, இருவரும் மது அருந்த அழைத்து பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்திருக்கின்றனர்.

தகராறு கைகலப்பானதில், இருவரும் முத்துக்கிருஷ்ணனை அடித்துக் கொன்றது தெரியவர, இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்