கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்... "இதை செய்தாக வேண்டும்.." அரசுக்கு மக்கள் திடீர் கோரிக்கை

Update: 2024-01-05 17:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்தத்திற்கான ஒரு நாள் கட்டணத்தை மட்டும் குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்த 8 ஆயிரத்து 514 சதுர அடி பரப்பளவில் இரண்டு அடுக்கு கீழ் தளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

324 கார்கள், 2 ஆயிரத்து 769 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவில் இட வசதிகள் உள்ளன. இதற்கான கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு, 3 மணி நேரத்திற்கு 10 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 15 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 25 ரூபாயும், 24 மணி நேரத்திற்கு 40 ரூபாயும் கூடுதலாகும் ஒவ்வொரு நாளுக்கும் 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேர கட்டணம் குறைவாக இருப்பதாகவும் அதிகமாக உள்ள நாள் கட்டணத்தை மட்டும் குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்