தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளையில் வகையிலிருந்து ஆரஞ்சுக்கு மறுவகைப்படுத்தியது தொடர்பாக தொழிற் சங்கங்கள் கோரிக்கைகளை அளித்ததாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் துவக்கி,உற்பத்தியினை அதிகரித்து, சந்தை வாய்ப்பை அதிகரிக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்னை நார் நிறுவனங்களின் கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, விரிவாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் அதே சமயம் இந்நிறுவனங்கள் நிலைத்தன்மையுடன் இயங்கிடவும் வழி வகுக்கும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.