"என்ன சமைச்சிருக்க இவ்ளோ கேவலமா" - தந்தையை கொடூரமாக வெட்டி கொன்ற மகன்

Update: 2024-06-03 06:39 GMT

சிதம்பரம் அருகே உணவு சரியில்லை எனக் கூறி தந்தையை வெட்டி படுகொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சிதம்பரம் அருகே உள்ள ஆணையங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பூராசாமி, மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் தனது மகன் மகேஷுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், உணவு சமைப்பதில் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. வழக்கம் போல் பூராசாமிக்கும், அவரது மகனுக்கும் உணவு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ், அவரது தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்ததுள்ளார். இதுதொடர்பாக மகேஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்