"கரையோர ஓட்டு வீடே நிம்மதி வாழ்க்கை" அடுக்கு மாடி குடியிருப்பில் தவிக்கிறோம் -புலம்பும் குடும்பங்கள்

Update: 2024-05-15 11:07 GMT

கரையோர ஓட்டு வீடே நிம்மதி வாழ்க்கை

அடுக்கு மாடி குடியிருப்பில் தவிக்கிறோம்

சென்னையில் புலம்பும் 23,000 குடும்பங்கள்

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில், அடிப்படை வசதியில்லாமல் தவித்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

2015ல் சென்னையை உலுக்கிய பெருவெள்ளத்தின் எதிரொலியாக, கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளடக்கிய சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை செய்து வந்தது.

இதன் மூலம் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் சீரமைக்கும் பணி மேற்கொண்ட நிலையில், இப்பகுதிகளில் கரையோரங்களில் வசித்து வந்த மக்களை மறு குடியமர்வு செய்தனர்.

அதில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள், சென்னைப் புறநகர் பகுதியான பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் மறு குடியமர்வு செய்யப்பட்டனர்.

கரையோரத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு 8 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வியப்பாகவே இருந்தது.

ஆனால்... மறுகுடியமர்வு செய்தது முதல் துயரத்தையே சந்தித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்..

பல அடுக்குகளுடன் உயரமாய் ஓங்கி நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதிலும் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சனை உள்ளதால் அன்றாட வாழ்க்கையே சிரமமாக உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்