பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் மீண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
பரந்தூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக, ஏகனாபுரம் கிராமத்தில் 752-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் 7 முறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், தொடர்ந்து 6 முறை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 ஆவது முறை தீர்மானம் நிறைவேற்றினர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் எதுவும் நடக்காதது குறித்து அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். பதற்றம் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.