தனி நபரின் நிலத்தை பஞ்சமி நிலமாக மாற்றிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2017-ல், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த தங்கராஜ், தனது தாத்தாவின் பெயரிலுள்ள நிலங்களை தனது பெயருக்கு மாற்றி பதிவு செய்துள்ளார். இதனிடையே இந்த நிலங்களை பஞ்சமி நிலம் என அறிவித்து மாவட்ட வட்டார வருவாய் அலுவலர் பட்டாவை ரத்து செய்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கராஜ் வழக்கு தொடர்ந்த நிலையில், பட்டாவை ரத்து செய்த உத்தரவுக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.