தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் வழக்கு - ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Update: 2024-08-17 02:41 GMT

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் யுவராஜூக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்டு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மனுவை திரும்ப பெற அனுமதியளித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்