தமிழகத்தை பரபரப்பாக்கிய ரூ.4000 கோடி மெகா மோசடி.. இறுக்கி வைத்து ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
தமிழகத்தை பரபரப்பாக்கிய ரூ.4000 கோடி மெகா மோசடி.. இறுக்கி வைத்து ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
4,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் சுரானா நிறுவன இயக்குனர் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னையை தலைமையிடமாக கொண்ட சுரானா நிறுவனம், வங்கிகளில் பெற்ற 4,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல், போலி நிறுவனங்கள் பெயரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் நிறுவனத்திற்கு எதிராக சிபிஐயை தொடர்ந்து, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் தனியாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சுரானா நிறுவன இயக்குனர்களை கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி சுரானா நிறுவன இயக்குநர் விஜயராஜ் சுரானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு, அடிப்படை வழக்கு ரத்து செய்யப்பட்டது என்பதற்காக அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் நோக்கமே சிதைந்து விடும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.