7 அடுக்கு பாதுகாப்பு... ஹை அலர்ட்டில் சென்னை ஏர்போர்ட் - பயணிகளுக்கு பறந்த மெசேஜ்

Update: 2024-08-09 07:57 GMT

7 அடுக்கு பாதுகாப்பு... ஹை அலர்ட்டில் சென்னை ஏர்போர்ட் - பயணிகளுக்கு பறந்த மெசேஜ்

78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களில் சென்னை விமான நிலையத்திற்கு 10 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த சூழலில், 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுதந்திர விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று முதல் விமான நிலையத்தில் 7 அடுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடைமுறை 20-ம் தேதி வரை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்பகுதியில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும், வெளி வட்ட பகுதியில் சென்னை மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு நிபுண்ணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, சோதனை காரணமாக உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவும் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்