வாட்ஸ் அப்க்கு வந்த மெசேஜ் - மயங்கி அனைத்தையும் இழந்த சென்னை இளைஞர்

Update: 2024-08-07 08:43 GMT

சென்னையில், ஆன்லைன் டிரேடிங் மூலம், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.அம்பத்தூர் அடுத்த பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், கடந்த ஓராண்டுக்கு முன் தனது வாட்ஸ் அப் எண்ணிற்கு, ஆன்லைன் டிரேடிங் குறித்து விளம்பரம் வந்ததாகவும், அதுகுறித்து மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோது, ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், நல்ல கமிஷன் கிடைக்கும் என மர்மநபர் ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதை நம்பி மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில், பல தவணைகளில் 1 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ததாகவும், முதலீட்டுத் தொகை, லாபம் என எதுவுமே கிடைக்காத நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த ஆவடி சைபர் கிரைம் போலீசார், திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த கிரிதரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி கும்பல் பல மாநிலத்தைச் சேர்ந்த பலரிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்