சென்னையில் இருந்து கிளம்பிய ரயிலில் கொள்ளை.. பரபரப்பு

Update: 2024-08-11 09:06 GMT

சென்னையில் இருந்து சென்ற ரயிலில், நள்ளிரவில் கொள்ளையர்கள் புகுந்து பயணிகளின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து செகந்திராபாத்துக்கு புறப்பட்ட ரயில், ஆந்திரா மாநிலம் தும்மல் செருவு ரயில் நிலையம் அருகே நேற்று நள்ளிரவில் சென்றபோது, ரயிலின் எஸ்6 மற்றும் எஸ்7 பெட்டிகளின் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், தூங்கி கொண்டிருந்த 3 பெண் பயணிகளின் கழுத்தில் இருந்து நகைகளை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நாடிக்குடி ரயில் நிலையம் அருகே நரசாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்