சென்னை மாதவரம் அசிஸ் நகரில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அந்த இடம் தேவைப்பட்டதால், அரசு அனுமதியுடன் கோயிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு கோயிலை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கினர். இது குறித்த தகவல் அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர், கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவல்துறையினர், வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை
அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில், போலீசார் பாதுகாப்புடன் கோவில் இடித்து அகற்றப்பட்டது.