40 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் அரக்கன்.. சென்னையில் எப்படி இருக்கும் - எச்சரித்த வானிலை மையம்

Update: 2024-09-01 15:06 GMT

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதிகாலையில், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்திற்கு அருகே கரையை கடந்த‌தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. நாளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வலுவான தரைக்காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகள் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் என்றும், இதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்