ஒரு காட்டு காட்டிய கனமழை.. சென்னையில் தோன்றிய அதிசய அருவி

Update: 2024-06-22 10:16 GMT

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிய கனமழையால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் கனமழை கொட்டியது. இதனால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனிடையே, தாம்பரம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் தானியங்கி நடை மேம்பாலத்தில் உள்ள மேற்கூரையில் நீர்ச்கசிவு ஏற்பட்டு, மழை நீர் அருவி போல கொட்டியது. இதனால், பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகினர். தானியங்கி நடை மேம்பாலங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்