``14 லட்சம் கட்டுனா தான் உடல்..2 நாளாக தராத பிரபல ஹாஸ்பிடல்''..சரசரவென உள்ளே புகுந்த MLA - அடுத்தடுத்து நடந்த அதிரடி சம்பவங்கள்

Update: 2024-05-29 07:07 GMT

சென்னை தனியார் மருத்துவமனையில் முதியவர் இறந்த விவகாரத்தில், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் முதியவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த 27 நாட்களாக சிகிச்சை பெற்ற ராஜேந்திரன் என்ற முதியவர் உயிரிழந்தார். அவரது உறவினர்களிடம் சிகிச்சை கட்டணமாக 14 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி மருத்துவமனை நிர்வாகம் 2 நாட்களாக உடலை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்தும், உடலை ஒப்படைக்க கோரியும் ராஜேந்திரனின் உறவினர்கள் மற்றும் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மருத்துவமைனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின், ராஜேந்திரனின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்