"டைம் கொடுங்க" - கெஞ்சிய மக்கள்.. கண்டுகொள்ளாது ஆக்ஷன் எடுத்த தாசில்தார்
சென்னை குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஒரு சிலர், வீடுகளை இடிக்க கால அவகாசம் கேட்டு தாசில்தாரிடம் கெஞ்சினார்கள். ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாக தாசில்தார் கூறினார். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.