சென்னையில் பாலியல் தொல்லை கொடுத்த 3 வது கணவன் - தாலி கயிறால் கதையை முடித்த மனைவி
சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் நாகம்மாள். கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் இவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான மணிவண்ணன், தினமும் நாகம்மாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு தம்பதி இருவரும் ஒன்றாக மது அருந்தியிருக்கின்றனர். அப்போது, கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறியதால் ஆத்திரமடைந்த நாகம்மாள், கணவரை தாலி கயிறால் கழுத்தை இறுக்கிகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் நாகம்மாளை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.