சாம்பாரில் கரப்பான் பூச்சி.! உணவை சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-07-21 01:54 GMT

சென்னை ராயபுரத்தில், கரப்பான் பூச்சி கிடந்த உணவை சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராயபுரம் பகுதியைச் சேர்ந்த திவாகர், இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பழைய ஜெயில் சாலையில் உள்ள உணவகத்தில் இட்லி பார்சல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளார். அப்போது, அதில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததைப் பார்த்த திவாகருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை குடும்பத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உணவகத்தின் மீது புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்