அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், முதல்வரை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துவதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை பகுதியில், புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை, அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, பல்வேறு இடங்களிலும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.