267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம்.. அதிரடி காட்டிய சுங்க துறை அதிகாரிகள்

Update: 2024-07-06 14:51 GMT

சென்னை, அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில்,

கடந்த 2 மாதங்களில், 167 கோடி ரூபாய் மதிப்புடைய 267

கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை

ஏற்படுத்தியிருந்தது. விமான நிலையத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து கடத்தல் நடந்தது. துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் ட்ரான்சிட் பயணிகள் மூலம் கடத்தப்பட்ட தங்கத்தை இந்த கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் மூலம், சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் சபீர் அலி, இலங்கையைச் சேர்ந்த டிரான்சிட் பயணி ஒருவர், கடை ஊழியர்கள் 7 பேர் ஆகிய 9 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த தடத்தில் முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் பெரும் எண்ணிக்கையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரத்தில், வேகமாக நடந்து வந்த விசாரணையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்