தொழில் பாட்னராக ஐடியா? அரசு ஒப்பந்ததாரரை ஏமாற்றிய பெண் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-02-13 10:36 GMT

மயிலாடுதுறையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சென்னையின் பல இடங்களில் மாடர்ன் துணிக்கடைகள் நடத்தி வரும் சோனிய ரவிக்குமார் என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இதன் பேரில் டி.நகரில் திறக்கப்பட்ட அவரின் துணிக்கடைக்கு சுமார் ஒரு கோடிக்கும் மேல் பண முதலீடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையிலும், தன்னை அவரின் தொழில் பாட்னராக ஏற்க மறுத்த சோனியா, ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டபோது, தகாத முறையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சுமத்தியுள்ளார். இதனடிப்படையில், சோனியா ரவிக்குமார் மற்றும் அவருடைய தாய் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சோனியா ரவிக்குமார்தான் பாஜக நிர்வாகியான அமர்பிரசாத், தன்னை தாக்கியதாக கூறி போலீசில் புகாரளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்