சென்னை பேருந்தில் தாக்குதல் நடத்திய கண்டக்டர்... அதிர்ச்சியில் பயணிகள் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-08-07 04:54 GMT

சென்னை பேருந்தில் தாக்குதல் நடத்திய கண்டக்டர்.. அதிர்ச்சியில் பயணிகள் - தீயாய் பரவும் வீடியோ

டிக்கெட்டுக்கு சில்லறை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பயணி ஒருவரை அரசுப்பேருந்து நடத்துநர் அடித்துள்ளார். தாம்பரத்தில் இருந்து ஊரப்பாக்கம் செல்வதற்காக அரசுப்பேருந்தில் ஏறிய இளைஞர், இருநூறு ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். நடத்துநர் சில்லறை இல்லை எனக்கூறி நீண்ட நேரமாக டிக்கெட் தர மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இளைஞரை நடத்துநர் தகாத வார்த்தையால் திட்டினார். தாக்கவும் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்