சென்னை அடையாறை சேர்ந்தவர் அக்தர் உசேன். கம்ப்யூட்டர் தொடர்பான ஹார்ட்வேர் விற்பனை செய்யும் கடைகள் வைத்திருக்கும் இவர், தொழிலதிபரான நிலையில், இவரை புதுப்பேட்டையைச் சேர்ந்த உபயதுல்லா என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி இருக்கிறார். தகாத வார்த்தைகள் பேசி அத்துமீறியதுடன், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க்கை போல்,கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அக்தர் உசேன் புகாரளித்த நிலையில், உபயதுல்லாவை கைது செய்த போலீசார், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.