அண்ணன் கண்முன்னே பறிபோன தங்கை உயிர் - சென்னையில் பயங்கரம்

Update: 2024-07-13 17:34 GMT

சென்னை ஐ.சி.எப் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், தனது சகோதரி ஹேமமாலினியுடன், இருசக்கர வாகனத்தில், சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். கனமழை பெய்ததால் பைக் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி, ஹேமமாலினி மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெங்கடேசன் காயமடைந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹேமமாலினியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் லாரியுடன் தப்பிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். சாலையில் இருந்த பள்ளத்தை மழைநீர் சூழ்ந்து மூடியதால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்