வானில் பறந்த தவளை, கரடி.. பாத்ததும் குஷியில் குதித்து விளையாடிய குழந்தைகள்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், அருகே உள்ள திருவிடந்தையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்ற முடிந்தது. கடந்த வியாழக்கிழமை துவங்கி, ஞாயிற்று கிழமை வரை நான்கு நாட்கள் இவ் விழா நடைபெற்றது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தாய்லாந்து, இந்தோனிசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தேசிய கொடி, ஆமை, ட்ராகன் என விதவிதமாக பறக்க விடப்பட்ட பட்டங்களை பார்த்து, குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த விழாவில் சுமார் 50 ஆயிரம்பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.