திடீரென செத்து மிதக்கும் மீன்கள்..சென்னை அருகே அதிர்ச்சி | chengalpattu | Fish
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள செக்கடித்தாங்கல் ஏரியில், ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீன்கள் இறந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். செக்கடித்தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு பகுதியாக மாறி வருவதாகவும், தனியார் நிறுவனத்தில் வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.