மதுராந்தகம் அருகே இருளர் இன மக்களுக்கான அரசின் தொகுப்பு வீடுகள், தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வடபட்டினம் கிராம ஊராட்சியில் அரசின் சார்பில், இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இந்த வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். 1 அடி ஆழம் மட்டுமே தோண்டி பேஸ் அமைத்து வீடுகள் கட்டப்படுவதாகவும், கை வைத்தாலே வீடுகளின் சுவர்கள் ஆடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.செங்கல்பட்டு ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து, வீடுகள் தரமாக கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும், பயனாளிகள் கோரியுள்ளனர்.