ஓரினச்சேர்க்கைக்கு வந்த கால் பாய்!காத்திருந்த இளைஞருக்கு ட்விஸ்ட்! ஆயுசுக்கும் மறக்க முடியாத சம்பவம்
ஓரினச்சேர்க்கை செயலி மூலம் இருவரை நூதன முறையில் வரவழைத்து, கத்தியை காட்டி மிரட்டி G-payயில் பணம் பறித்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான இருவர், ஓரினச் சேர்க்கை செயலியை பயன்படுத்தி வந்துள்ளனர். செயலி மூலம் தன்பாலின ஈர்ப்பாளர்களை தேடி வந்த இருவரும், பேரமனூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் அழைத்ததன் பேரில் மறைமலைநகருக்கு சென்றிருக்கின்றனர். அங்கிருந்த பாழடைந்த பங்களாவிற்கு இருவரையும் வரவழைத்த லோகநாதன், மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து இருவரையும் கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார். தொடர்ந்து, இருவரிடம் இருந்து அவர்கள் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்த நால்வரும், ஜிபே மூலம் 28 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து விட்டு தப்பியோடி இருக்கின்றனர். புகாரின் பேரில், லோகநாதன் மற்றும் சிறுவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், லோகநாதனை சிறையிலும், மற்ற மூவரை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்திருக்கின்றனர்.