டாஸ்மாக்கில் பாதி சரக்கு அடித்ததும் உடலில் தெரிந்த திடீர் மாற்றம் - தீயாய் பரவும் காட்சிகள்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 180 ரூபாய் கொடுத்து வாங்கிய ரம் வகை மதுபானத்தை பாதி குடித்ததாகவும், அது வழக்கத்திற்கு மாறாக அதிக மயக்கம் ஏற்பட்டதாகவும் வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அந்த மதுபானம் கடந்த 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும் பழைய மதுபானத்தை தனக்கு கொடுத்ததாகவும் கூறி அவர் டாஸ்மாக் ஊழியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.