ஒரு வாரமாக பெய்து வரும் மழையினால் மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகின்றது. இது
விவசாய நிலங்களில் சென்று மதுராந்தகம் ஹவுசிங் போர்டு ரயில்வே மேம்பாலம் வழியாக தண்ணீர் வெளியேறி வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள சாய் நகரில் மழை நீர் வீடுகளை சுற்றி சூழ்ந்துள்ளது. ஜே.சி.பி இயந்திரம் மூலம், சாய் நகரில் தேங்கியுள்ள மழை நீரை,நகராட்சி நிர்வாகம்
கால்வாய் அமைத்து வெளியேற்றினர். இதனிடையே முழு கொள்ளவை எட்டிய மாம்பாக்கம் ஏரியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.