சிகிச்சையில் பெற்றவர் மருத்துவமனை பின்புறம் சடலமாக கிடந்த அதிர்ச்சி... செங்கல்பட்டில் பரபரப்பு

Update: 2024-09-03 08:28 GMT

சிகிச்சையில் பெற்றவர் மருத்துவமனை பின்புறம் சடலமாக கிடந்த அதிர்ச்சி... செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், மருத்துவமனை பின்புறம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி அழகு நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிரான். 50 வயதான இவர் கூலித்தொழிலாளியான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவரின் கண்காணிப்பில் இருந்த தம்பிரான், திடீரென மருத்துவமனை பின்புறம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 3 ஆவது மாடியில் சிகிச்சை பெற்று வந்த தம்பிரான், மருத்துவமனை பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்