தேர்தல் முடிந்ததும் தருவதாக சொல்லியும் CBSE பள்ளியை இடித்து தள்ளிய பைனான்சியர்

Update: 2024-06-01 09:27 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த, பவழக்காரன்சத்திரம் பகுதியில் முருகானந்தம் என்பவர் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு கழிவறை கட்டிடம், ஆசிரியர்கள் ஓய்வறை ஆகியவற்றை கட்ட, சென்னையை சேர்ந்த ஜெயந்திலால் என்பவருக்கு சொந்தமான நிலத்தை 3.15 கோடி ரூபாய்க்கு விலை பேசினார். இதில் ஒரு கோடி ரூபாய் பணத்தை ஜெயந்தி லாலிடம் கொடுத்துவிட்ட நிலையில், மீதப்பணத்தை தேர்தல் முடிந்ததும் தருவதாக கூறியுள்ளார் முருகானந்தம். கொடுக்கல் வாங்கலில் பிரச்னையான நிலையில், ஜெயந்தி லால் தனது ஆட்களோடு சென்று, பள்ளியின் கட்டிடங்களை இடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க, முருகானந்தம் புகார் மனு அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்