மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முன் சென்ற லாரி மீது கார் பின்புறமாக மோதிய விபத்தில் காரில் பயணித்த பெண் பலியானார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இந்திராணி என்பவர், உசிலம்பட்டியில் உள்ள தமது உறவினர் இல்லத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக, வந்துள்ளார். வரும் வழியில், முன் சென்ற காரை முந்துவதற்காக முயன்ற போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இந்திராணி உயிரிழந்தார். உடன் பயணித்த 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.