தமிழக பெண்களை குறிவைக்கும் கொடிய நோய்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Update: 2024-02-03 04:42 GMT

நாட்டில் உள்ள கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து, விசிக எம்.பி., ரவிக்குமார், கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள சுகாதரத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் பகேல், நாட்டில் மொத்தமாக சுமார் 3.42 லட்சம் பேர் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதில் உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக சுமார் 45 ஆயிரம் பேரும், அதற்கு அடுத்த இடத்தில், தமிழ்நாட்டில் சுமார் 36 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்