மா தோப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவுடி! கொடூரமாக தாக்கி முகத்தை சிதைத்த நபர்!சென்னையில் அதிர்ச்சி
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் அருகே அடையாளம் தெரியாத நபர் தலை, முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சோழவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி விக்கி என தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்தில், விக்கி மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்