பைக்கிலிருந்து விழுந்து உடைந்த காலெலும்பு.. அட்டை பெட்டியில் கட்டு போட்ட ஊழியர்கள்
காலில் எலும்பு முறிந்த இளைஞருக்கு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியைக் கட்டி கட்டுப் போடப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது... பைக்கில் இருந்து தவறி விழுந்த நிதிஷ்குமார் என்ற இளைஞர் மினாப்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்டருக்கு பதில் அட்டைப் பெட்டியை உள்ளே வைத்து கட்டுப் போட்டுள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்... மேலும் 5 நாள்களாக அவரை ஒரு மருத்துவர் கூட வந்து பார்க்கவில்லையாம்... இதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் முசாபர்பூரில் உள்ள கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அட்டைப் பெட்டியை வைத்து கட்டுப்போட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.