ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம்..அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்...

Update: 2023-07-27 02:52 GMT

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட முக்கிய நிர்வாகி தீபக் பிரசாத்திடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தை மேற்பார்வை இடுவதற்காக நியமிக்கப்பட்ட நான்கு பேரில் முக்கியமாக நபராக தீபக் பிரசாத் செயல்பட்டது தெரியவந்துள்ளது. காவலில் எடுத்து விசாரணை செய்ததில் 62 கோடி அளவிற்கு தீபக் பிரசாத் வசூல் செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 62 கோடி ரூபாய்க்கு யார் யார் பெயரில் எங்கு எங்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து பட்டியலப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 500 முகவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக முகவர்கள் அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு விரைவில் அடுத்த கூடுதல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்