அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த சாமியாரை கைது செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாமியாரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக காவல்துறை எடுக்கவில்லை என்பதால் சட்டம் சாமியாரின் கையில் இருப்பதாக சந்தேகம் எழுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் இறையாண்மை கெடுக்கும் நோக்கில் பேசிய பரமஹம்சாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் கூறினார்.