உயிரை பறித்த `பெல்ட்'... உடலை போட்டுவிட்டு தப்பியோடிய சக நண்பர்கள் - கதறி அழுத உறவினர்கள்

Update: 2024-05-10 12:20 GMT

அரியலூர் மேல அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த இவர், கீழபழுவூரில் உள்ள சிமெண்ட் ஆலை ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று இரவு... பணியில் ஈடுபட்டிருந்த முரளி கிருஷ்ணன், எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலை நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்து முரளி கிருஷ்ணனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சக தொழிலாளிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு உடலை கொண்டு சென்ற நிர்வாகத்தினர், மருத்துவமனையில் திரண்டிருந்த முரளி கிருஷ்ணனின் உறவினர்களை கண்டு பயந்து, உடலை மருத்துவமனை வளாகத்திலே விட்டுவிட்டு தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், உடலின் பிரேத பரிசோதனைக்கு கையெழுத்து போட ஆளில்லாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக முத்து கிருஷ்ணனின் உறவினர்கள் திண்டாடியது சோகத்தை ஏற்படுத்தியது. இதில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை மேலும் கூட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்