- பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது...
- பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
- குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.